Tuesday, 9 August 2011
Tuesday, 12 July 2011
காதல்
" தோல்வியடைந்த காதலில் மட்டும்தான்...
" ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துக் கிடக்கிறது....
" விடுபட்ட காரணங்கள் கோடிக்கணக்கில்....
" கொட்டிக் கிடக்கிறது.!
" பேசாத மொழிகள் இல்லை...
" பேசாத விழிகள் இல்லை...- இருந்தும்
" சில இதயங்கள் காதலை ..
" விழுங்கி விடுகின்றன.!
நட்பு
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:
"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"
நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.
நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:
"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை.
அழகிலும் அழகு புன்னகை
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!!!!!
Friday, 8 July 2011
FACE BOOK அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள். Video Calling.
சமூக வலைத்தளமான முகநூல் தற்போது 750 மில்லியன் பயனாளர்களை
அடைந்துள்ளது. இருப்பினும் கூகுள் அறிமுகம் செய்த சமூக வலைத்தலத்தினால் அது பெரும் போட்டி நிலையினை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது FACE BOOK தளம் பல புதிய சேவைகளை வழங்கிவருகிறது.
கடந்த மாதத்தில் வெளியான SKYPE புதிய பதிப்பில் FACE BOOK தளத்தினை SKYPE இல் இருந்தவாறு பயன்படுத்த முடியும் என்பதை பதிவு செய்தேன்.
எதிர்வரும் வாரங்களில் FACE BOOK தளம் SKYPE உடன் இணைந்து வீடியோ சட் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது. FACE BOOK தளத்தில் வீடியோ சட் வசதியினை பெற உங்களின் சட் மெனுவில் புதிதாக ஐகான் சேர்கப்படும் .
[Image]
அத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அரட்டை அடிக்க குழு அரட்டை வசதியினையும் அறிமுகம் செய்யவுள்ளது . உங்கள் குழு அரட்டையில் நண்பர்களை இனைத்துகொள்வதர்கான வசதியும் தரப்படும்.
[Image]
இந்த வசதிகள் எதிர்வரும் புதன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை நீங்கள் உடனே பெற இந்த லிங்க் சென்று முயற்சி செய்து பாருங்கள் . http://www.facebook.com/videocalling

கூகுள் மொழி பெயர்க்கிறது
சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது.http://translate.google.co.in/ என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும்.
தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.
மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.
அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.
இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.
I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby
இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.
வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது.

Subscribe to:
Comments (Atom)